Published : 21,Nov 2021 06:49 PM
இந்தியா VS நியூசிலாந்து : மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் டி20 தொடரில் இரு அணிகளும் தற்போது விளையாடி வருகின்றன. மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்தியா 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
Captain Rohit Sharma wins the toss and elects to bat first in the third and final T20I.
— BCCI (@BCCI) November 21, 2021
Live - https://t.co/kbSRlDEQf1#INDvNZ@Paytmpic.twitter.com/1q9CdXBx7e
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்தியா, நியூசிலாந்து அணியை இந்த தொடரில் ஒயிட் வாஷ் செய்யும் நோக்கில் இந்த போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணி அதனை முறியடிக்க முயலும்.
ஆடும் லெவன் விவரம்...
நியூசிலாந்து!
மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், மார்க் சேப்மேன், பிலிப்ஸ், டிம் செய்ஃபெர்ட் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஆடம் மில்னே, ஃபெர்குயூசன், இஷ் சோதி, போல்ட்.
இந்தியா!
ரோகித் ஷர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல்.