Published : 21,Nov 2021 02:13 PM

சையத் முஸ்தாக் அலி கோப்பை டி20: இறுதிப் போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் நாளை மோதல்

Tamil-Nadu-and-Karnataka-will-play-in-the-final-of-the-Twenty20-cricket-series-tomorrow
சையத் முஸ்தாக் அலி கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள் விளையாடுகின்றன.
 
டெல்லி நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணி வென்றது. மற்றொரு அரையிறுதியில் விதர்பா அணியை மணிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடகா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இவ்விரு அணிகளும் தலா 2 முறை சையத் முஸ்தாக் அலி கோப்பையை வென்றுள்ளன. இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட கடைசி 5 போட்டிகளில் நான்கில் கர்நாடக அணி வெற்றி பெற்றுள்ளது.
 
image
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் கர்நாடக வென்றது. இருப்பினும் நடப்பு சாம்பியனாக வலம் வரும் தமிழ்நாடு அணி 3 ஆவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்