பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட கரூரை சேர்ந்த 12ஆம் வகுப்புப் படிக்கும் தங்கையின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உச்சபட்சத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், போக்சோ சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கரூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்புப் படிக்கும் தங்கை பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். பச்சிளம் பிள்ளைகள் அடுத்தடுத்து பாலியல் கொடுமைகளால் உயிரை மாய்த்துக்கொள்வது பெரும் வேதனையையும், கொடும் வலியையும் தருகிறது. அரும்பாக மலரும் பருவத்திலேயே பிஞ்சுகள் உதிர்ந்து கருகுவது கண்டு மனம்வெதும்புகிறேன்.
எதுவும் செய்யவியலா கையறு நிலையும், பிள்ளைகளுக்கு நேரும் அவல நிலையும் கண்டு உள்ளம் குமுறுகிறேன்; அறவுணர்ச்சியும், நீதியும் சாகடிக்கப்பட்டு பிஞ்சுகளின் உயிரைக்குடிக்கும் இக்குற்றச்சமூகத்தில் அங்கம் வகிப்பதற்கு குற்றவுணர்ச்சியில் வெட்கித்தலைகுனிகிறேன். பெண் பிள்ளைகளுக்குத் தொடர்ச்சியாக நேரும் இக்கொடுமைகள் அவர்களது எதிர்காலம், பாதுகாப்பு குறித்து பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகின்றது.
கரூர்: 12ஆம் வகுப்புப் படிக்கும் தங்கை பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். தங்கையின் மரணத்திற்குக் காரணமானவர்களை சட்டத்திற்கு முன்நிறுத்தி, உச்சபட்சத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்! https://t.co/Adtz6J7n4q pic.twitter.com/Od4HpVQhd3 — சீமான் (@SeemanOfficial) November 21, 2021
ஆகவே, இவ்விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சீரியக் கவனமெடுத்து, பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக தீவிரமான சட்டநடவடிக்கைகளை எடுக்கத் துணிய வேண்டும் எனவும், தங்கையின் மரணத்திற்குக் காரணமானவர்களை சட்டத்திற்கு முன்நிறுத்தி, அவர்களுக்கு உச்சபட்சத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இத்தோடு, போக்சோ சட்டத்தை இன்னும் கடுமையாக்கி, அதுகுறித்து விழிப்புணர்வையும், பரப்புரையையும் தீவிரப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்திருக்கிறார்
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!