[X] Close

நெதர்லாந்து: கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் வெடித்தது வன்முறை

உலகம்

Dutch-Police-clash-with-anti-lockdown-protesters-7-injured
நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.
 
நெதர்லாந்து நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள் அல்லது அண்மையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 
image
அந்த வகையில் நெதர்லாந்தில் உள்ள ராட்டர்டாம் நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close