Published : 22,Aug 2017 02:26 AM

ஓடுதளத்தில் கிடந்த ரூ.4.6கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்

customs-seized-rs-4-6-crore-valued-gold-in-runway-of-an-airport

சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் கிடந்த 4.6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர்.

சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு‌ ஏற்பட்டதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பை சோதனை செய்யப்பட்டது. அப்போது அந்த பையில் 16 கிலோ எடையுள்ள 4.6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்ப‌ட்டது. இதைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமரா மூலம் அந்த பையை வைத்துச் சென்றவர் யார் என்பது குறித்து சுங்க அதிகாரிகள் ‌விசாரணை மேற்கொண்டனர். அதில் விமான நிலைய டிராலி ஓட்டுநர் குமார் என்பவர் விமானத்தில் இருந்து அந்த பையை இறக்கியதும், அதிகாரிகளின் சோதனையை தவிர்க்க, ஓடுதளத்தில் அதனை விட்டுச் சென்றதும் தெ‌ரியவந்தது. இதைத் தொடர்ந்து குமாரை கைது செய்த சுங்க அதிகாரிகள் சர்வதேச கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என்றும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்