[X] Close

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெஸ்ட் டிரைவை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த ‘ஓலா’ நிறுவனம் திட்டம்!

வணிகம்

Ola-plans-to-expand-electric-scooter-test-drive-across-India

ஓலா நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் இந்திய சந்தையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அறிமுகமானது. S1 மற்றும் S1 புரோ செக்மெண்ட் என இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மூலம் தனது விற்பனையை தொடங்கியுள்ளது ஓலா. இந்நிலையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெஸ்ட் டிரைவை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த ஓலா திட்டமிட்டுள்ளது. 

image

இந்தியாவில் உள்ள சுமார் 1000 நகரங்கள் மற்றும் குறுநகர பகுதிகளில் ஓலா S1 ஸ்கூட்டரை மக்கள் டெஸ்ட் டிரைவ் (சோதனை ஓட்டம்) செய்து பார்க்க வழிவகை செய்யப்படும் என ஓலா தெரிவித்துள்ளது. 


Advertisement

பெங்களூரு, டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், கொச்சி, மும்பை மற்றும் புனே நகரங்களில் தற்போது ஓலா ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்யலாம். வரும் 27-ஆம் தேதி முதல் சூரத், திருவனந்தபுரம், கோழிக்கோடு, விசாகப்பட்டினம், விஜயவாடா, கோயம்புத்தூர், வதோதரா, புவனேஸ்வர், திருப்பூர், ஜெய்ப்பூர் மற்றும் நாக்பூர் நகரங்களில் டெஸ்ட் டிரைவ் சேவை அறிமுகமாக உள்ளது. டிசம்பர் 15-க்குள் மேலும் பல நகரங்களில் இந்த சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக ஓலா தெரிவித்துள்ளது. 

image

“தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஓலா ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்கின்றனர். இதன் டிசைன், செயல்பாடு, தொழில்நுட்பம் என அனைத்தும் அவர்களை கவர்ந்துள்ளது. பாசிட்டிவான கருத்துகள் தான் அதிகம் கிடைத்துள்ளன” என தெரிவித்துள்ளார் ஓலா எலக்ட்ரிக் தலைமை வணிக அதிகாரி அருண் சிர்தேஷ்முக். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close