[X] Close

முத்தலாக் வழக்கில் இன்று தீர்ப்பு

Judgement-in-Triple-Talak-case-today

முத்தலாக் முறைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க இருக்கிறது.


Advertisement

மூன்று முறை ‘தலாக்’ சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கம், முஸ்லிம்களிடையே நிலவி வருகிறது. இது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்கக்கோரி, 5 முஸ்லிம் பெண்கள் உள்பட 7 பேர் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.
’முத்தலாக்’ வழக்கம் முஸ்லிம்களின் அடிப்படை உரிமையா? என்பது பற்றி மட்டுமே தீர்ப்பு அளிப்போம் என்றும் நீதிபதிகள் ஏற்கனவே கூறியிருந்தனர். கடந்த மே 18-ம் தேதி விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு அளிக்கிறது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close