[X] Close

வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர் கைது ; இருவருக்கு வலைவீச்சு

குற்றம்

Chennai-Two-students-arrested-for-assaulting-a-police-officer-involved-in-a-vehicle-search-have-escaped

மதுரவாயலில் கஞ்சா போதையில் முதல்நிலை காவலர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை மதுரவாயலில் முதல் நிலை காவலர் விக்னேஷ் (35) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கற்களால் காவலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், காயமடைந்த காவலர் விக்னேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பாஸில் (19) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.


Advertisement

image

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட பகவான் மற்றும் உஸ்மான் ஆகிய இருவரும் தலைமறைவானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர். கஞ்சா போதையில் கல்லூரி மாணவர்கள் போலீசாரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close