[X] Close

தூய்மை பணியில் சிறந்த நகரங்கள்: இன்று விருது வழங்குகிறார் குடியரசுத் தலைவர்

இந்தியா

Best-cleanest-Cities-in-sanitary-Work-President-presents-the-award-today

தூய்மை பணியை சிறப்பாக மேற்கொண்ட நகரங்களுக்கான விருதினை இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவிக்கிறார்.

இந்தியாவை தூய்மைப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தூய்மைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்களுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

image


Advertisement

அதன்படி இந்த ஆண்டிற்கான "சுவெச் சர்வேக்சன்" விருதுகளை வழங்கப்படவுள்ளது. 2021ம் ஆண்டுகான விருது வழங்கும் விழாவில் 342 நகரங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அதில்,

1. 9 நகரங்கள் ( 5 நட்சத்திரங்கள் பெற்றுள்ளது )

2. 166 நகரங்கள் ( 3 நட்சத்திரங்கள் பெற்றுள்ளது )


Advertisement

3. 167 நகரங்கள் ( 1 நட்சத்திரங்களை பெற்றுள்ளது )

சுவெச் சர்வேக்சன் அதாவது தூய்மையான நகரங்கள் என 73 நகரங்கள் மட்டுமே துறை அமைச்சகத்தால் ஆய்வு செய்யப்பட்டது. நாள் 2021ம் ஆண்டு ( இந்த ஆண்டு ) 4,320 சிறந்த தூய்மையான நகரங்களுக்கான போட்டியில் பங்கேற்றதாக தெரிவிக்கபட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நகரங்களை ஆய்வு செய்யும் போது தூய்மையாக வைத்து கொள்வதில் மாநிலங்களின் செயல்திறன் அதிகரித்து உள்ளதாகவும், குறிப்பாக இந்த ஆண்டு 6 மாநிலம் 6 யூனியன் பிரதேசம் என மொத்தமாக 12 மாநிகங்களின் தூய்மை செயல்திறன் என்பது 5%-25% வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. நாட்டில் கிட்டத்தட்ட 1,800க்கும் மேற்பட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாகவும், 1,500க்கும் மேற்பட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்கவோ அல்லது சேமித்து வைக்கவோ தடை விதித்து உள்ளது. குறிப்பாக 3,000க்கும் மேற்பட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முழு தடையை விதித்து உள்ளனர் என்றும் இவை தான் நாட்டினை தூய்மை படுத்த எடுத்து வைகப்பைக்கப்பட்ட மிகப்பெரிய தடம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

image

இந்நிகழ்ச்சியில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் சிங் பூரி, இணை அமைச்சர் கௌஷல் கிஷோர்,மாநில முதலமைச்சர்கள் மற்றும் நகரங்களின் மேயர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இதனைப்படிக்க...வெள்ளப்பெருக்கு எதிரொலி - சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை 


Advertisement

Advertisement
[X] Close