Published : 20,Nov 2021 10:40 AM

3ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்படுமா?

Will-the-3rd-dose-of-corona-vaccine-be-given

இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை சுமார் 75 கோடி பேருக்கு 2 தவணை தடுப்பூசியும், 38 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், '3ஆவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதா? அப்படி செலுத்த வேண்டும் என்றால் யாருக்கெல்லாம் செலுத்த வேண்டும்' என்பது குறித்து விவாதிக்க தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்பக் குழுவின் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. தற்போதைய கொரோனா நிலவரம், தடுப்பூசிகள் உற்பத்தி மற்றும் கையிருப்பு, தடுப்பூசியின் செயல் திறன் கால அளவு, பல்வேறு தரப்புகளின் பரிந்துரைகள், வெளிநாடுகளின் அனுபவங்கள் என அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு 3ஆவது தவணை தடுப்பூசி குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Countries in the Americas notified of first COVID-19 vaccine allocations  through COVAX - PAHO/WHO | Pan American Health Organization

இதற்கிடையே அமெரிக்காவில் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளை 3ஆவது டோசாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்த அந்நாட்டு அரசுக்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்