மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ''2014ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளோம். விவசாயிகளின் வேதனையை நேரடியாக அறிவேன். நாட்டின் விவசாயிகளில் 80% பேர் சிறு விவசாயிகளாக உள்ளனர். விவசாயிகளுக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பயிர் சேதத்திற்காக விவசாயிகளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது. விவசாயிகளின் நலனுக்காக 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் சிறு விவசாயிகளை வலுப்படுத்தும். விவசாய சட்டங்களுக்கு ஆதரவளித்த விவசாயிகளுக்கு நன்றி. 3 வேளாண் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!