Published : 18,Nov 2021 06:48 PM

புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Leave-announced-for-schools-and-colleges-in-Puducherry-tomorrow

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(19.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(19.11.2021) விடுமுறை என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மற்றும் செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதுச்சேரியிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நவ.19ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்