சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் அப்டேட் நாளை வெளியாகிறது.
சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. அடுத்ததாக, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா- பிரியங்கா மோகன் நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ வெளியாகவிருக்கிறது. சமீபத்தில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவித்தார் இயக்குநர் பாண்டிராஜ். நேற்று முதல் டப்பிங் பணிகளும் துவங்கியுள்ளன. படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது. அப்படி, இல்லையென்றால் பொங்கலுக்கு அஜித்தின் ‘வலிமை’ படத்துடன் மோதும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நாளை 12 மணிக்கு ’அப்டேட் கொடுப்போம் காத்திருங்கள்’ என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூறியிருக்கிறது. இசையமைப்பாளர் இமானும் நாளை அப்டேட் என்று பதிவிட்டுள்ளார். அதன்படி நாளை படத்தின் டீசர் அல்லது படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை வெளியிட வாய்ப்பிருக்கிறது.
சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். வில்லனாக வினய் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்குப்பிறகு சூர்யா சிறுத்தை சிவாவுடன் புதிய படம், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ உள்ளிட்டப் படங்களில் நடிக்கவிருக்கிறார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்