Published : 21,Aug 2017 01:58 PM

டெல்லி இயக்கத்தில் நடிக்கும் ஓபிஎஸ், இபிஎஸ் : மு.க.ஸ்டாலின் விமர்சனம்

OPS--which-plays-in-Delhi-direction--EPS--MK-Stalin-s-review

டெல்லியில் இருப்பவர்களின் இயக்கப்படி அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு இருப்பதாக திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘அதிமுக இரு அணிகள் இணைப்புக்கான முயற்சி டெல்லியில் இருந்து நடைபெற்றது.  டெல்லி அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி அடிபணிய வைத்து அச்சுறுத்தி கொண்டிருக்கக்கூடிய கொடுமை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
டெல்லியின் கதை, வசனம் டைரக்சனுக்கு ஏற்ற வகையிலே முகத்தில் அரிதாரத்தைப்பூசிக் கொண்டு ஓபிஎஸும், இபிஎஸும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்’ எனத் தெரிவித்தார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்