[X] Close

சச்சின், டிராவிட்டின் பெயரை சூட்டிக்கொண்ட நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா! யார் இவர்?

விளையாட்டு,சிறப்புக் களம்

Who-is-Rachin-Ravindra-Meet-New-Zealand-cricketer-named-after-Sachin-Tendulkar-and-Rahul-Dravid
ரச்சினின் தந்தை இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் என்பதால், தனது மகனுக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட்டின் நினைவாக அப்பெயரை சூட்டினார்.
 
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முன்னதாக, நியூஸிலாந்து அணியில் ஜேம்ஸ் நீஷம், கேன் வில்லியம்சன், இஷ் சோதி, ஆடம் மில்னே ஆகியோருக்குப் பதிலாக மாா்க் சாப்மேன், டாட் ஆஸ்டில், ரச்சின் ரவீந்திரா, லாக்கி ஃபொ்குசன் ஆகியோா் இணைந்திருந்தனா். இதில் 1 பவுண்டரி உடன் 7 ரன்கள் எடுத்து முகமது சிராஜ் வீசிய பந்தில் ஆட்டமிழந்த ஆல்-ரவுண்டர் வீரரான ரச்சின் ரவீந்திரா, இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவராக இருந்தார். ஏனெனில் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்கள் நியூசிலாந்துக்காக விளையாடுவது புதிதல்ல. இஷ் சோதி, ஜீதன் படேல், ஜீத் ராவல் போன்றவர்கள் அவ்வரிசையில் உள்ளவர்கள்தான்.
 
image
நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் இந்தியாவை சேர்ந்த தம்பதியருக்கு பிறந்தவர் ரச்சின் ரவீந்திரா. ரச்சினின் தந்தை ரவி இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் என்பதால், தனது மகனுக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் நினைவாக அப்பெயரை சூட்டியிருப்பதாக கூறப்படுகிறது. 2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக ரச்சின் ரவீந்திரா விளையாடியுள்ளார். பின்னர் கடந்த செப்டம்பரில் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டராக அறிமுகமானார். இதுவரை 6 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், லார்ட்ஸில் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஆடும் லெவனில் ரச்சின் இடம் பெறவில்லை.
 
தனது சிறு சிறுவயதிலிருந்தே சச்சின் டெண்டுல்கரை முன்மாதிரியாகக் கொண்டு விளையாடி வருவதாக முன்பொருமுறை பேட்டி ஒன்றில் ரச்சின் ரவீந்திரா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close