வேகத்தை விட விவேகம்தான் பெரிது. ஆனால் அதைவிட அஜீத்தே பெரிது என கருத்துத் தெரிவித்துள்ளார் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன். விஜயைப் பாராட்டியதால் நெட்டிசன்களின் கலாய்ப்புக்கு ஆளான அவர், இப்படி ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.
விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய பார்த்திபன், ‘ஓபிஎஸ்-ம் ஈபிஎஸ்-ம் ஒண்ணு சேர்ந்தா என்ன ஆகும்னு தெரியாது. ஆனா விஜய்யும், அவரது ரசிகர்களும் சேர்ந்தால் விஜய்தான் இனி சி.எம்.” என்றார். இதனை கேட்டு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். (பின்னர், இடைவெளிவிட்டு) “சி.எம்னா கலெக்ஷன் மன்னன்” என விஜயை உயர்த்திப் பேசினார்.
இந்நிலையில், பார்த்திபனின் இந்த கருத்துக்களுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வந்தன. கைதட்டல்களுக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா? கொடுத்த காசுக்கு மேல கூவீட்டிங்க என்று நெட்டிசன்கள் பார்த்திபனை கலாய்த்தனர்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில், பார்த்திபன் அவரது ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் பதில் கருத்து ஒன்றை கவிதை வடிவில் பதிவிட்டுள்ளார். "காசுக்கு மாரடிக்காத Mass-ஆன பேச்சுக்கு மாசு நிறைந்த ஏச்சுக்கு ஆளானது இதுவே முதன்முறை! வாயார/மனதார வாழ்த்துவது என் மேடை நாகரீகம். அவர் அழைத்தாலும் தலை நிமிர இப்படி சொல்வேன். "வேகத்தை விட விவேகம் பெருசு-ஆனா விவேகத்தை விட அஜீத்தே பெருசு!"-நான் கலைஞர்கள் அனைவருக்கும் நண்பன். ஆனால், சினிமாவுக்கு மட்டுமே ரசிகன். 'ஆளப்போறான்(?)சிறந்த(?)மனிதன்(?) வாழப்போறான் விவசாயி'-அதுவே நம்பிக்கை நிறைந்த என் பேச்சின் மெரஸலான மெசேஜ்!" எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி