Published : 17,Nov 2021 09:57 PM

 தலைமை நீதிபதி பொறுப்பேற்கும் வரை நீதிபதி துரைசாமி பணிகளை கவனிப்பார்: குடியரசுத் தலைவர்

Until-the-Chief-Justice-takes-charge-Judge-Duraisamy-will-oversee-the-work-President

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி துரைசாமி தலைமை நீதிபதியின் பணிகளை கவனிப்பார் என குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி முனீஸ்வரர்நாத் பண்டாரி. இவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்கும் வரை நீதிபதி துரைசாமி தலைமை நீதிபதியின் பணிகளை கவனிப்பார்.

image

நீதிபதி முனிஸ்வரர்நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக பதவியேற்ற பிறகு அவர், தலைமை நீதிபதி பணிகளை கவனிப்பார் என்றும் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். குடியரசுத் தலைவரின் இந்த உத்தரவு குறித்த அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்