Published : 17,Nov 2021 09:49 PM

’இந்தியன் 2’: காஜல் அகர்வாலுக்குப் பதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாகும் த்ரிஷா?

Actress-Trisha-to-replace-Kajal-in-actor-kamalhaasan-and-director-shankar-Indian-2

கமல்ஹாசன் – ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்குப் பதிலாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க கடந்த 2019-ல் தொடங்கப்பட்ட திரைப்படம் ’இந்தியன் 2’. பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 60 விழுக்காடு நிறைவடைந்த நிலையில், கிரேன் விபத்தால் ஷங்கருக்கும், தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் மீண்டும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக முதலில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்தின் பூஜையிலும் கலந்துகொண்டார்.

image

இந்த நிலையில், தற்போது காஜல் அகர்வால் தாய்மை அடைந்திருப்பதால் அவருக்குப் பதில் நடிகை த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. த்ரிஷா நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்