“பொங்கல் தொகுப்பில் பரிசு பணத்தையும் சேர்க்க வேண்டும்” - இபிஎஸ் வலியுறுத்தல்

“பொங்கல் தொகுப்பில் பரிசு பணத்தையும் சேர்க்க வேண்டும்” - இபிஎஸ் வலியுறுத்தல்
“பொங்கல் தொகுப்பில் பரிசு பணத்தையும் சேர்க்க வேண்டும்” - இபிஎஸ் வலியுறுத்தல்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு, பரிசு பணத்தையும் சேர்த்து வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு பொங்கல் தொகுப்பு அறிவிப்பு வெளியிட்டிருப்பதை அடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த அதிமுக அரசின் ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும்,முழு கரும்பும் வழங்கி வந்தோம். ஆனால் திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம், கரும்பை காணவில்லை.

தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு, தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com