Published : 21,Aug 2017 12:49 PM
1200 கி.மீ. தூரத்தை நான்கரை மணி நேரத்தில் கடக்கும் புல்லட் ரயில்

சீனாவில் பெய்ஜிங்-சாங்காய் புல்லட் ரயிலின் வேகம் மணிக்கு 350 கிலோமீட்டராக அதிகரிக்கப்படுவதால் 1200 கிலோமீட்டரை வெறும் நான்கரை மணி நேரத்தில் கடந்து விடலாம் என்று சீன ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.
சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து சாங்காய் வரையில் இயக்கப்பட்டுவரும் புல்லட் ரயிலின் வேகம் மேலும் அதிகரிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு ரயில்வே துறை அறிவித்துள்ளது. தற்போது 300 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வரும் இந்த புல்லட் ரயில் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது.
இதன் மூலம் பெய்ஜிங், சாங்காய் ஆகிய நகரங்களுக்கு இடையேயான ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்தை நான்கரை மணி நேரத்தில் சென்றடைய முடியும் என சீன ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இந்த புல்லட் ரயில் மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.