அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னேறுகிறதா? - அண்ணாமலை விளக்கம்

அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னேறுகிறதா? - அண்ணாமலை விளக்கம்
அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னேறுகிறதா? - அண்ணாமலை விளக்கம்

எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னேறுகிறது என்பது மக்களுடைய கருத்து என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அண்ணாமலை இன்று பார்வையிட்டார். தோவாளையில் வெள்ளத்தினால் சேதமடைந்த பாலத்தை பார்வையிட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, புயலால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் எனக்கேட்டுவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் ரூ. 8 ஆயிரம் மட்டுமே அறிவித்திருப்பதை ஏற்கவே முடியாது.

காரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதியில் பார்வையிடுவதால் மக்கள் பிரச்னை குறித்து தெரிந்து கொள்ள முடியாது” என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.

மேலும் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாரதிய ஜனதா முன்னேறுகிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “பாஜக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் இணைந்து எங்களது பணியை செய்கிறோம், இது மக்களுடைய கருத்து” என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com