ராமநாதபுரத்தில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரை போலீசார் கைதுசெய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ராமநாதபுரம் பாரதி நகரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏடிஎம் மையத்தை கடந்த 13-ம் தேதி இரவு மர்ம நபர் ஒருவர் கடப்பாரையைக் கொண்டு உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார். இதுகுறித்து வங்கியின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலையடுத்து வங்கிப் பணியாளர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த கேணிக்கரை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதனைத் தொடர்ந்து போலீசார் ஏடிஎம் அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்ததில், கண்ணாடி அணிந்த ஒருவர் கையில் இரும்பு கடப்பாரையுடன் ஏடிஎம் மையத்திற்குள் செல்வது, பிறகு வந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயற்சி செய்தது போன்றக் காட்சிகள் பதிவாகி இருந்தது.
“உலகின் தூய்மையான நதி” - மேகாலயா உம்ங்கோட் ஆற்றின் படத்தை பகிர்ந்த ஜல்சக்தி அமைச்சகம்
இந்தக் காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றதாக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சி பிளாக் பகுதியில் வசிக்கும் சிவச்சந்திரன் என்பவரை கேணிக்கரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?