குஜராத் மாநிலம் பரூச்சில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வசவா சமூக பழங்குடியினரை, வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி இஸ்லாமிய மதத்துக்கு மாற்றியதாக ஒன்பது பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பரூச் மாவட்டத்தின் அமோத் தாலுகாவில் உள்ள ககாரியா கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக லண்டனில் வசிக்கும் உள்ளூர் நபர் உட்பட 9 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. "குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், பழங்குடி சமூகத்தின் மக்களிடையே உள்ள பலவீனமான பொருளாதார நிலை மற்றும் கல்வியறிவின்மை ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்களை மதமாற்றம் செய்ய தூண்டினார்கள்" என்று காவல்துறை அதிகாரி கூறினார்.
குஜராத் மத சுதந்திர திருத்த சட்டம், 2021 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். “வெளிநாட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி முஸ்லிம் அடிப்படைவாதிகள் சட்டவிரோதமாக மதமாற்றம் செய்யும் நடவடிக்கையை கிராமத்தில் நீண்ட காலமாக செய்து வந்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் வசவா இந்து சமூகத்தினரை ஏமாற்றி பணம் மற்றும் பிற உதவிகளை வழங்கி அவர்களை ஏமாற்றி, இரு சமூகத்தினரிடையே பகையை பரப்பி, அமைதியை குலைக்க சதித்திட்டம் தீட்டியுள்ளனர்” என்று பரூச் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப்படிக்க...இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் மோசமான காற்றின் தரம் பதிவாகியுள்ளது?
Loading More post
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!