Published : 16,Nov 2021 10:44 AM

இந்தியாவில் மீண்டும் 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

Daily-corona-exposure-in-India-has-again-dropped-below-10-000

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

மத்திய அரசின் இன்றைய புள்ளி விவரங்கள் படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,865 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை என்பது 3,44,56,401 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,971 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 3,38,61,756 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

image

அதே நேரத்தில் இன்று மட்டும் 197 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 4,63,852 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் மட்டும் தற்பொழுது 1,30,793 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 525 நாட்களில் குறைந்த எண்ணிக்கை ஆகும். மேலும் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.27 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.35 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 59,75,469 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தமாக 1,12,97,84,045 டோஸ்கள் தடுப்பூசி இந்தியாவில் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனைப்படிக்க...நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரம் 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்