Published : 16,Nov 2021 07:18 AM
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரம்

கிராமபுற உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
மேயர், சேர்மன், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டை வரையறுப்பது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் நடந்த ஆலோசனையில் ஆணையத்தின் செயலாளர் சுந்தரவல்லி, வார்டு மறுவரையறை ஆணைய செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மகளிர், பட்டியலினத்தவர்கள், பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.