
சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை பாலியல் வன்முறை செய்த டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தானே அருகிலுள்ள நவ்புடா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் பிரதிக் டாம்பே. இவரிடம் சிகிச்சைக்காக வந்தார் 21-வயது இளம் பெண் ஒருவர். திருமணம் முடிந்து இன்னும் கர்ப்பம் ஆகாததால் அதற்கான சிகிச்சைக்காக வந்துள்ளார் அவர். மருந்து கொடுப்பதாகக் கூறி அவரை தனியறைக்கு அழைத்துச் சென்ற டாக்டர், பாலியல் வன்முறை செய்துள்ளார். தப்பிக்க முயன்றை அந்தப் பெண்ணை பலவந்தமாக பிடித்து இழுத்து, இதை செய்துள்ள அந்த டாக்டர், இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார்.
ஆனால் இதை சகிக்க முடியாத அந்தப் பெண், நவ்புடா போலீசில் புகார் செய்தார். போலீசார் டாக்டர் பிரதிக் டாம்பேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.