Published : 14,Nov 2021 11:03 PM
“பூஸ்டர் டோஸ் என்ற பெயரில் ஊழல்” - உலக சுகாதார அமைப்பின் தலைவர்!

கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் பரவலாக செலுத்தப்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகளை சேர்ந்த மக்கள் இரண்டு டோஸ்களை பெருவாரியாக பெற்ற நிலையில் தற்போது சில நாடுகளில் ‘பூஸ்டர்’ டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூஸ்டர் டோஸ் என்ற பெயரில் ஊழல் நடப்பதாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ்.
“பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கான முதல் தவணை கூட பெற்றிடாத நிலையில் இரண்டு தவணை தடுப்பூசி பெற்ற ஆரோக்கியமாக உள்ள மக்களுக்கு வளர்ந்த நாடுகளில் பூஸ்டர் டோஸ் பெற்று வருகின்றனர். முன்களப் பணியாளர்கள், மூத்த குடிமக்கள் என எளிய நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் முதல் டோஸை எதிர்நோக்கி உள்ளனர். எத்தனை பேருக்கு தடுப்பூசி கிடைத்தது என்பதை காட்டிலும் யாருக்கு தடுப்பூசி கிடைத்தது என்பதே கவனிக்க வேண்டிய விஷயம்” என சொல்லியுள்ளார் அவர்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை காட்டிலும் செலுத்தாமல் உள்ளவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.