நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் குறித்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றில் கமெண்ட் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என இரு அணிகளும் இதுவரை டி20 உலகக் கோப்பையை வெல்லாத அணிகள். அதனால் இந்த போட்டி குறித்து பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளை வாழ்த்தி போட்டோ ஒன்றை பகிர்ந்திருந்தது. அந்த பதிவை இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், “வார்னர் vs கேன். இவர்கள் இருவரும் SRH அணியிலும் இணைந்து விளையாடி உள்ளனர். இந்த போட்டியில் வெற்றியாளர் யார் என்பதை கணிக்க முடியவில்லை” என கமெண்ட் செய்திருந்தார்.
அதற்கு தான் வார்னர், “நாங்கள் இருவரும் வெற்றியாளர்களாக இருப்போம்” என ரிப்ளை செய்துள்ளார்.
வார்னரின் ‘ஸ்பிரிட்டை’ பல்வேறு பயனர்கள் பாராட்டி கமெண்ட் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!