இயக்குநர் பா.ரஞ்சித்துடன் நடிகர் விக்ரம் இணையும் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘மகான்’, மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இதில், ‘கோப்ரா’ இம்மாத இறுதியில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைகிறது. அடுத்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்படுகிறது.
‘சார்பட்டா பரம்பரை’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் பா. ரஞ்சித் ’நட்சத்திரங்கள் நகர்கிறது’ படத்தை இயக்கி வருகிறார். அதோடு, ‘குதிரைவால்’, ‘ரைட்டர்’, மாரிசெல்வராஜ் - துருவ் விக்ரம் இணையும் படம் என பல படங்களையும் தயாரித்து வருகிறார். ’நட்சத்திரம் நகர்கிறது’ படப்பிடிப்பு முடிந்தவுடன் பா.ரஞ்சித் ’விக்ரம் 61’ படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு, முதல் முறையாக பா.ரஞ்சித் இசை ஞானி இளையராஜாவுடன் இணைகிறார் என்று ததகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. தெருக்குரல் அறிவு சர்ச்சையால் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தோடு சந்தோஷ் நாராயணன் - பா.ரஞ்சித் கூட்டணி முடிவுற்றது என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் ரஞ்சித் இயக்கி சூப்பர் ஹிட் அடித்த‘மெட்ராஸ்’படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்தான் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்