[X] Close

தமிழகம் வரும் சுற்றுப்பயணத்தை மீண்டும் ஒத்திவைத்தார் அமித்ஷா

Amit-Shah-adjourned-the-tour-to-Tamil-Nadu

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் நடக்க உள்ளது. இதனையடுத்து அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நாளை ஆகஸ்ட் 22 ம் தேதி அமித்ஷா தமிழகம் வர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அமித்ஷாவின் தமிழக வருகை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆலோசனைக்கூட்டம் என்று சொல்லப்பட்டாலும், தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழல் காரணமாகவே அமித் ஷா தனது திட்டத்தை தள்ளி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close