Published : 13,Nov 2021 08:45 PM

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் நாளை 2000 தடுப்பூசி சிறப்பு முகாம்கள்

2000-vaccination-special-camps-tomorrow-in-200-wards-of-Chennai-Corporation

பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் நாளை 2000 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 8வது தீவிர தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

முகாம்கள் நடைபெறும் இடங்களை https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்ற வாரம் சனிக்கிழமை தீபாவளி விடுமுறை காரணமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை.

image

கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும் இரண்டாம் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் மாநகராட்சியின் சிறப்பு முகாம்களில் பங்குபெற்று கோவிட் தடுப்பூசி செலுத்தி கொள்ள மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாம்கள் குறித்து பொதுமக்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கூறப்படுகிறது.

இதனைப்படிக்க...வெள்ளத்தில் சிக்கிய வீடுகளுக்கு பொருட்களை அனுப்பும் ட்ரோன் கருவி 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்