[X] Close

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள்

கொரோனா வைரஸ்

Tamilnadu-covid-update-today

தமிழகத்தில் 809 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் 812 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அது சற்று குறைந்திருக்கிறது. இன்றைய புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கையுடன் சேர்த்து பார்க்கையில், தமிழகத்தில் இதுவரை தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 27,14,025 என்றாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 934 பேர் கொரோனாவிலிருந்து மீண்டதை தொடர்ந்து, தற்போது சிகிச்ச்சையில் 9,751 பேர் உள்ளனர். இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 26,68,001 என்று உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,00,034 ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து, இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 5,25,42,503 என்றாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி: கேரளாவில் கால்நடை மருத்துவ மாணவர்களிடம் கண்டறியப்பட்ட புதிய வகை நோரோ வைரஸ்


Advertisement

image

கடந்த 24 மணி நேரத்தில், 14 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,273 என்றாகியுள்ளது. இன்று பாதிப்பு உறுதியானவர்களில் அதிகம் பேர் பாதித்த மாவட்டங்களாக கோவை (134 பேர்), சென்னை (120 பேர்) ஆகிய மாவட்டங்கள் உள்ளன. பாதிப்பு உறுதிசெய்யப்படுவோர் விகிதம், செங்கல்பட்டு (1.4%) மாவட்டத்தில் அதிகமாக உள்ளது.


Advertisement

Advertisement
[X] Close