கோவில் சொத்தில் ஏழு ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் கிளினிக் நடத்தி வந்த மருத்துவரை அப்புறப்படுத்த பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்தில் கிளினிக் நடத்தி வந்த மருத்துவர் தியாகராஜன், ஏழு ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை எனக் கூறி, அவரை அப்புறப்படுத்த கோவில் செயல் அலுவலர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் தியாகராஜன் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி சுரேஷ்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடந்த 2013-ம் ஆண்டு வாடகை செலுத்தவில்லை என மனுதாரரை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டதை அடுத்து, 2014 அக்டோபர் வரையிலான வாடகை பாக்கி ரூ.3,56,000 ரூபாய் செலுத்திய நிலையில், 2019ல் தன்னிச்சையாக வாடகையை உயர்த்தியதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், 2014 நவம்பர் முதல் கடந்த ஏழு ஆண்டுகளாக வாடகையை வழங்காமல் இருந்ததால், மனுதாரரை ஆக்கிரமிப்பாளராக அறிவித்து அவரை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்தி: வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்தும் நீரின்றி காணப்படும் காஞ்சிபுரம் கோயில் குளங்கள்
அரசுத்தரப்பு வாதத்தை ஏற்த நீதிபதி, பல ஆண்டுகளாக வாடகை பாக்கி செலுத்தாதவரின் குத்தகையை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதாகவும், ஏழு ஆண்டுகளாக ஒரு பைசா கூட வாடகை செலுத்தாமல் கோவில் சொத்தை அனுபவித்த நிலையில், அப்புறப்படுத்த உத்தரவை எதிர்க்க எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதுவரை அவரை அப்புறப்படுத்தியிருக்காவிட்டால், உடனடியாக கோவில் சொத்தில் இருந்து வெளியேற்றவும், ஏழு ஆண்டு வாடகை பாக்கியை வசூலித்துக் கொள்ளலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Loading More post
`கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை’ - கேரளா விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரம்
'இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த கேப்டன் இவர்தான்..' - சேவாக் புகழும் அந்த வீரர் யார்?
`கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது' - நீதிமன்றம் காட்டம்
'தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்' - சந்திரபாபு நாயுடு கடிதம்
’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ - திருநாவுக்கரசர் எம்.பி
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்