[X] Close

வெள்ளத்தில் தத்தளிக்கும் கன்னியாகுமரி - தொடரும் மழையால் மக்கள் அவதி

வீடியோ ஸ்டோரி

கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் அப்பகுதிமக்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25-ம் தேதி தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது தற்போது மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த 3-நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

image


Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் அருகே உள்ள தொட்டிப் பாலத்தில் நீர் நிரம்பி வழிகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக கனமழை பொழிந்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகள் மழைநீரால் சூழ்ந்து வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. இந்நிலையில், கால்வாயில் இருந்து செல்லும் தண்ணீர் தடிக்காரன்கோணம் அருகே உள்ள சைபன் தொட்டிப்பாலத்தில் நிரம்பி அருவிபோல் கொட்டி வருகிறது..

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close