சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கிய இடங்களை கண்காணித்து அத்தியாவசிய பொருட்களை அனுப்பும் வகையில் தண்ணீரில் மிதக்கும் அதி நவீன ட்ரோன்களை போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து பெய்த கனமழையால் குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், கடைகள் என சென்னை நகரம் முழுவதுமே வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மழை நீர் தேங்கியுள்ள வீடுகளை கண்காணித்து அங்கு தேவையான உணவு, அரிசி, மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்களை உடனடியாக வழங்குவதற்காக, தண்ணீரில் மிதந்து செல்லும் அதி நவீன ட்ரோன்களை போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், கொளத்தூர், புளியந்தோப்பு உட்பட பல இடங்களில் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. 10 தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு 5 ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் நீர்நிலைகள், மேம்பாலங்கள் அருகே நின்று பொதுமக்கள் செல்ஃபி எடுக்க வேண்டாம் எனவும், குழந்தைகளை மின்சாதனங்கள், மழை நீர் தேங்கிய பகுதிகளுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் ட்ரோனில் உள்ள ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்