Published : 21,Aug 2017 04:04 AM
இந்தோனேசிய கொடி தலைகீழாக அச்சிடப்பட்டதால் சர்ச்சை - வருத்தம் தெரிவித்த மலேசியா

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான வழிகாட்டுதல் புத்தகத்தில் இந்தோனிஷியாவின் தேசிய கொடி தலைகீழாக அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைக்கண்ட இந்தோனேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் இமாம் நக்ராவி, போட்டியை நடத்தும் மலேசியாவுக்கு டுவிட்டர் வாயிலாக தமது கண்டனத்தை தெரிவித்தார். இதனையடுத்து "வெட்கப்படு மலேசியா" என்ற ஹேஷ்டாக்கில் இந்தோனேசிய மக்கள் போட்டி போட்டுக்கொண்டு பிரபலப்படுத்தி வருகின்றனர். இந்தோனிஷியா கொடிக்கு பதிலாக போலந்து கொடியை வெளியிட்டது மன்னிக்க முடியாதது எனவும் இந்தோனேசியா மக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் போட்டியை நடத்தும் மலேசியா விளையாட்டு அமைச்சகம் தங்களின் தவறுக்காக வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.