[X] Close

"’ஜெய்பீம்’ படம் மாற்றத்திற்கான ஒரு உத்வேகம் அளிக்கிறது" - ஷைலஜா டீச்சர் பாராட்டு

சினிமா

Shailaja-teacher-praise-actor-suriya-jai-bhim-movie

நடிகர் சூர்யாவின் ’ஜெய் பீம்’ படத்தைப் பார்த்துவிட்டு கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் பாராட்டியிருக்கிறார்.

 தா.செ.ஞானவேல் எழுதி இயக்கிய ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. கடந்த 2 ஆம் தேதி வெளியான இப்படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மைச் சம்பவத்தையே ‘ஜெய் பீம்’ படமாக எடுத்திருக்கிறார்கள்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைமில் ‘ஜெய் பீம்’ வெளியாகி இந்தியா முழுக்க பாராட்டுகளைக் குவித்து வருகிறது. இந்த நிலையில், கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டியிருக்கிறார். அவரது ட்விட்டர் பக்கத்தில்,


Advertisement

image

 ”’ஜெய்பீம்’ படம் மாற்றத்திற்கான ஒரு உத்வேகம் அளிக்கிறது. சமூகத்தின் வன்முறை மற்றும் சமூக பாகுபாடு குறித்த கடினமான உண்மைகளின் சித்தரிப்பைக் காட்டுகிறது. பிரமாதமான எடுத்துள்ளார்கள். முழு குழுவிற்கும் வாழ்த்துக்கள்” என்று பாராட்டியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close