திமுக அரசின் நிர்வாக திறமையின்மையே சென்னை மழை வெள்ளத்தில் தத்தளிப்பதற்கு காரணம் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி, “எங்கள் மீது பழி சுமத்த வேறு காரணம் கிடைக்காமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு விசாரணைக் கமிஷன் என்று முதல்வர் கூறுகிறார். தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சிறப்பாக செயல்பட்டது என்று மத்திய அரசால் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை மட்டும் 140 விருதுகளை பெற்றுள்ளது. சென்னையில் 523 குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதனை அகற்றுவதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட பொறியாளர்களை தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது. தற்போது அனுபவம் இல்லாத புதிய பொறியாளர்களை நியமித்ததால் அவர்களுக்கு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எங்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது? அதனை எப்படி வெளியேற்ற வேண்டும் என்ற அம்சங்கள் தெரியவில்லை. கடுமையாக மக்கள் பாதித்து உள்ள நிலையில், உடனடியாக அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
நியாய விலை கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டாலின் சென்னை மேயராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்து உள்ளார். ஆனால் அவருக்கு எவ்வாறு இந்த நேரத்தில் செயல்பட வேண்டும் என்று தெரியவில்லை. திறமையான அரசாங்கம் இல்லாததால்தான் 500க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை மறைக்கத் தான் அதிமுக அரசை அவர்கள் குறை கூறி வருகிறார்கள். அதிமுக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால்தான், கனமழை வந்த போது கூட குறைவான மணி நேரங்களில் அவற்றை அகற்ற முடிந்தது” என தெரிவித்தார்.
இதனைப்படிக்க...மழை வெள்ள பாதிப்பு: ஓபிஎஸ் - இபிஎஸ் தனித் தனியாக ஆய்வு
Loading More post
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய விரைவில் வருகிறது அவசர சட்டம்?
திருநெல்வேலி: ஆட்டோ கவிழ்ந்து எல்கேஜி மாணவன் உயிரிழப்பு; 5 குழந்தைகள் காயம்
அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறாரா ஓபிஎஸ்?
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!