புதுச்சேரியில் கழிவு நீர் வாய்க்காலில் விழுந்த மூதாட்டியை காப்பாற்றி அவரை தூக்கி சென்று வீட்டில் சேர்த்த போலீசாருக்கு பாராட்டுக்குள் குவிகின்றது.
புதுச்சேரியில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மூலக்குளம் குண்டுசாலை கழிவு நீர் வாய்க்காலில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தவறி விழுந்ததாக ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து, அந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய ஜெயப்பிரகாஷ், சரவணக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மூதாட்டியை காப்பாற்றினர். அப்போது தான் அவரது பெயர் சுந்தரி (70) என்பதும் அவர் மேரி உழவர்கரை பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.
அந்த மூதாட்டியை இரண்டு காவலர்களும் தூக்கிச்சென்று அவரது வீட்டில் சேர்த்தனர். மேலும் அவருக்கு உடைகளை மாற்றவும், அவருக்கு உணவும் வாங்கிக்கொடுத்துள்ளனர். மேலும் அவர்களது உறவினர் பற்றி விசாரித்து அவர்களுக்கு தகவல் கொடுத்து, மூதாட்டியை கவனிக்க வேண்டும் என்றும் காவலர்கள் அறிவுறுத்தினர். தொடர்ந்து. மூதாட்டியின் பேரர்கள் அவரை தற்போது கவனித்து வருகின்றது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி இரண்டு காவலர்களுக்கும் பாராட்டு குவிந்து வருகின்றது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!