[X] Close

டெல்லியில் இன்று பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டம்

bjp-cm-s-meet-will-be-held-in-delhi

பாரதிய ஜனதா ஆளும் மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று கூட்டியுள்ளார்.

டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தல் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த கூட்டத்தில் ‌13 மாநில முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் வரும்காலத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்து பிரதமர் மோடியும், கட்சித் தலைவர் அமித்ஷாவும் ஆலோசனை வழங்குவார்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தோல்வி பயம் காரணமாகவே பாரதிய ஜனதா இந்த கூட்டத்து‌க்கு ஏற்பாடு செய்திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close