Published : 12,Nov 2021 12:56 PM
மழை வெள்ள பாதிப்பு: ஓபிஎஸ் - இபிஎஸ் தனித் தனியாக ஆய்வு
சென்னையில் வெள்ள பாதிப்புகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனித் தனியாக ஆய்வு செய்தனர்.
சென்னையில் கொட்டி தீர்த்த மழையால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மக்களையும் நேரில் சந்தித்து அரசியல் கட்சித்தலைவர்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள கணபதிபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். இதேபோல ஓ.பன்னீர் செல்வமும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.