இலங்கை அணி ஆடிய வேகத்தைப் பார்த்தால் 300 ரன்களை சேசிங் செய்ய வேண்டியிருக்கும் என நினைத்தோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறியுள்ளார்.
இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை ஈட்டியது. தம்புல்லாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அக்ஷர் படேல் 3 விக்கெட்டுகளையும், கேதர் ஜாதவ், சாஹல், பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பின்னர் ஆடிய இந்திய அணியில் தவானும், கேப்டன் விராட் கோலியும் சிறப்பாக ஆடியதால் 29-வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. தவான் 90 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 20 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கோலி 70 பந்துகளில் 82 விளாசினார்.
வெற்றிக்கு பின் பேசிய கேப்டன் விராத் கோலி, ‘ இலங்கை அணி ஆட்டத்தைச் சிறப்பாகத் தொடங்கியது. அவர்கள் ஆடிய வேகத்தைப் பார்த்தால் 300 ரன்களை சேசிங் செய்ய வேண்டியிருக்கும் என்று நினைத்தோம். மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. கடந்த 3 மாதமாக தவான் சிறப்பாக ஆடி வருகிறார். அவர் அப்படியே தொடர வேண்டும். அடிக்க ஆரம்பித்துவிட்டால் அவரைக் கட்டுப்படுத்துவது கடினம். 2019-ல் நடக்க இருக்கும் உலக கோப்பையை நோக்கி எங்கள் திட்டங்களை வகுக்க தொடங்கி இருக்கிறோம். அக்ஷர் பட்டேல் சிறப்பாக விளையாடினார். அடுத்தப் போட்டியில் 3 சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்