[X] Close

டி20 உலகக் கோப்பை : அரையிறுதியில் பாகிஸ்தானை வெல்ல ஆஸ்திரேலியாவிற்கு 177 ரன்கள் இலக்கு!

விளையாட்டு

Australia-needed-177-runs-to-win-Pakistan-in-T20-World-Cup-Semi-Final-2

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா விளையாடி வருகின்றன. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் ரன்களை எடுத்தது. 

image

அந்த அணிக்காக கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் 71 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பவர் பிளேயில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் வீழ்த்த தவறியது. பாபர் 34 பந்துகளில் 39 ரன்களை சேர்த்து அவுட்டானார். 


Advertisement

தொடர்ந்து வந்த ஃபக்கர் ஜாமன், ரிஸ்வான் உடன் இணைந்து 72 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். ரிஸ்வான் 52 பந்துகளில் 67 ரன்களை சேர்த்தார். 18, 19, 20 என கடைசி ஓவர்களில் அடுத்தடுத்து மூன்று பேட்ஸ்மேன்களை பாகிஸ்தான் அணி இழந்தது. இருந்தாலும் ஃபக்கர் ஜாமன் இறுதி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். 32 பந்துகளில் 55 ரன்களை விளாசினார். கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் சிக்சர் விளாசி அரைசதம் பதிவு செய்திருந்தார் அவர். 

image

ஸ்டார்க் 2 விக்கெட்டும், கம்மின்ஸ் மற்றும் சாம்பா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர். 


Advertisement

ஆஸ்திரேலியா 177 ரன்கள் எடுத்தால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறலாம். இதில் வெல்லும் அணி வரும் ஞாயிறு அன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடும். 


Advertisement

Advertisement
[X] Close