கடலூரியில் மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிறுவர் - சிறுமிகள் காப்பகம் மற்றும் தனியார் பள்ளி தாளாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை அடுத்த வீராரெட்டிகுப்பம் கிராமத்தில், அமலா சிறுவர், சிறுமிகள் காப்பகம் மற்றும் தனியார் பள்ளி நடத்தி வருபவர் ஜேசுதாஸ் ராஜா (65). இவர், கடந்த 25.10.2021 அன்று தனது காப்பகத்தில் தங்கியிருந்த 2 சிறுமிகளை காணவில்லை என அலடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆலடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், சென்னை மற்றும் அரியலூர் மாவட்டத்தில் இருந்த 2 சிறுமிகளை மீட்ட காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அந்த 2 சிறுமிகள் உட்பட 3 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது. இதையடுத்து .கடலூர் மாவட்ட பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 3 சிறுமிகளை ஆஜர்படுத்தினர்.
அப்போது ரகசிய வாக்குமூலம் அளித்த சிறுமிகள், தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் காப்பகத்திலிருந்து தப்பிச் சென்றதாக நீதிபதியிடம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஆலடி பேலீசார் ஜேசுதாஸ் ராஜா மீது வழக்குப் பதிந்து, அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Loading More post
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!