Published : 31,Jan 2017 08:21 AM

விக்ரம் பிரபுவின் சத்ரியன் பாடல் வெளியீடு

sathriyan-audio-release-function

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் ‘சத்ரியன்’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் விக்ரம் பிரபுவுடன் கைகோர்த்திருக்கும் படம் சத்ரியன். இப்படத்தின் பாடல்களின் தலைப்பு நேற்று வெளியிடப்பட்ட நிலையில் படத்தின் பாடல் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இப்படத்தில் சூடா ஒரு சூரியன், பாறை மேலே, மைனா ரெண்டு என மூன்று பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக்கிற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை வைரமுத்து, விவேக், சினேகன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நாயகியாக மஞ்சிமா மோகன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் இசைவெளியிட்டு விழாவில் நடிகர் விக்ரம் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன், கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் அமீன் கலந்து கொண்டனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. படத்தின் பாடல் வெளியிட்டு விழா இன்று நடைபெற்ற நிலையில் படம் வெற்றி பெற திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்