[X] Close

தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை தொடர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Farmers-are-happy-in-Tamil-Nadu-due-to-heavy-rain

தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.


Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி, கருப்பூர் பகுதிகளில் மழை பெய்துள்ளது. கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் சேலம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில பிற்பகல் 3:00 மணிக்கு ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. தருமபுரியிலும் கனமழை பெய்தது. நெசவாளர் காலனி, செந்தில் நகர், பிடமனேரி, ஆட்சியர் அலுவலகம், உள்ளிட்ட இடங்களில் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதேபோல் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மூன்றாவது நாளாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழக, கேரள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close