உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஒரே வாரத்தில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளது. டெஸ்லா நிறுவன பங்குகளின் விலை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் சரிவை சந்தித்தனால் இந்த இழப்பை சந்தித்துள்ளார் மஸ்க். இது வரலாறு காணாத அதிகபட்ச இரண்டு நாள் சரிவு என தெரிவித்துள்ளது ப்ளூம்பெர்க்.
இந்த சரிவுக்கு காரணம் மஸ்க் கடந்த வாரம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ட்வீட் தான் என சொல்லப்படுகிறது. அதில் சுமார் 10 சதவிகித டெஸ்லா பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக பயனர்களிடம் வாக்கெடுப்பு (POLL) நடத்தி இருந்தார் அவர்.
முன்னதாக தனது தனிப்பட்ட கடன் பிரச்சனைகளை தீர்க்கும் நோக்கில் மஸ்க், டெஸ்லா பங்குகளை விற்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஒரே வாரத்தில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்திருந்தாலும் அவரது மொத்த சொத்து மதிப்பு 271 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
இதே போல கடந்த 2019-இல் மெக்கென்சி ஸ்காட்டை விவாகரத்து செய்த பிறகு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் சுமார் 36 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒரே நாளில் இழந்திருந்தார்.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!