அதிநவீன, ரகசிய செயல்பாடு கொண்ட போர்க்கப்பலை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது சீனா

அதிநவீன, ரகசிய செயல்பாடு கொண்ட போர்க்கப்பலை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது சீனா
அதிநவீன, ரகசிய செயல்பாடு கொண்ட போர்க்கப்பலை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது சீனா

மிகப்பெரிய, அதிநவீன மற்றும் ரகசியமான செயல்பாட்டு திறன்களைக் கொண்ட போர்க்கப்பலை பாகிஸ்தானுக்கு சீனா வழங்கியுள்ளது.

சீனா தயாரித்து, பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய ரகசிய செயல்பாடுகளை கொண்ட அதிநவீன போர்க்கப்பலை தயாரித்து ஒப்படைத்துள்ளது. இந்த போர்க்கப்பல்PNS Tughril நான்கு வகை 054 போர் கப்பல்களில் முதன்மையானதான இது, பாகிஸ்தான் கடற்படைக்காக கட்டப்பட்டது.

"கப்பல் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் அதிக திறன் கொண்டதாகும். மேற்பரப்பில் இருந்து மற்றும் நீருக்கடியில் சென்று தாக்கும் திறனை இந்த போர்க்கப்பல் கொண்டுள்ளது. இதனை சைனா ஸ்டேட் ஷிப் பில்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிஎஸ்எஸ்சி) வடிவமைத்துள்ளது. ஷாங்காய் நகரில் நடந்த விழாவில் இந்த போர்க்கப்பல் பாகிஸ்தான் கடற்படைக்கு வழங்கப்பட்டது.

முந்தைய சீன போர் கப்பல்களுடன் ஒப்பிடுகையில், புதிய கப்பலில் மேம்பட்ட ரேடார் அமைப்பு மற்றும் அதிக அளவிலான ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருப்பதால், சிறந்த வான் பாதுகாப்பு திறன் உள்ளதுஎன்று சீன கடற்படை ஆராய்ச்சி அகாடமியின் மூத்த ஆராய்ச்சியாளரான ஜாங் ஜுன்ஷே கூறினார்.

சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து உருவாக்கிய JF-17 போர் விமானம் கடந்த ஆண்டு வெளிவந்தது. JF-17 பிளாக் 3 இன் வளர்ச்சி மற்றும் உற்பத்தி நடந்து வருகிறது என்று சீன சட்டமன்ற உறுப்பினரும், சீனா-பாகிஸ்தான் இணைந்து உருவாக்கிய போர் விமானத்தின் தலைமை வடிவமைப்பாளருமான யாங் வெய் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com