Published : 09,Nov 2021 03:23 PM

”சென்னையை இத்தனை ஓட்டையாக வைத்திருப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை”- அண்ணாமலை

Is-Chennai-a-residential-area-or-a-monsoon-lake-says-bjp-leader-Annamalai

”இத்தனை ஆண்டுகள் சென்னையை தங்கள் கோட்டையாக கூறிக்கொள்பவர்கள் இத்தனை ஓட்டையாக வைத்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையால் சென்னை முழுக்க மழைநீரால் மிதந்துகொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் பாஜக அலுவலகத்திலேயே உணவு தயாரித்து வழங்கி வருகிறார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை.

image

அதோடு, மழை பாதிப்புகளையும் பார்வையிட்டு மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

image

image

image

மழைவெள்ளக் களத்தில் இருக்கும் அண்ணாமலை, தனது விட்டர் பக்கத்தில் ”இது மக்கள் வாழ்விடமா? அல்லது மழைக்கால ஏரியா? இத்தனை ஆண்டுகள் சென்னையை தங்கள் கோட்டையாக கூறிக்கொள்பவர்கள் இத்தனை ஓட்டையாக வைத்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும் அத்தியாவசியமான பொருட்களையும் வழங்கி வந்தேன்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்