ஸ்டைலிஷ் லுக்கில் ’சார்பட்டா’ துஷாரா விஜயன்: கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள்

ஸ்டைலிஷ் லுக்கில் ’சார்பட்டா’ துஷாரா விஜயன்: கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள்
ஸ்டைலிஷ் லுக்கில் ’சார்பட்டா’ துஷாரா விஜயன்: கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள்

நடிகை துஷாரா விஜயனின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை அனைத்து தரப்பினரும் பாராட்டினார்கள். ஆர்யா, துஷாரா விஜயன், ஜான் கொக்கன், ஷபீர், ஜான் விஜய் ஆகிய நடிகர்களின் பெயர்களே மறந்துவிட்டு கபிலன், மாரியம்மாள், வேம்புலி, டான்சிங் ரோஸ், டேடி போன்ற கதாபாத்திரங்களின் பெயர்களே நம் மனதில் நிற்கும் அளவிற்கு திரைக்கதையை சுவாரசியமாக வடிவமைத்திருந்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.

குறிப்பாக, ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மாளாக நடித்த துஷாரா விஜயனின் நடிப்பு கவனம் ஈர்த்து. ‘எனக்கு மாரியம்மா மாதிரி ஒரு மனைவி அமைய மாட்டாளா’ என்கிற அளவுக்கு நெட்டிசன்கள் கருத்திட்டார்கள்.

தற்போது வசந்தபாலனின் ‘அநீதி’, பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது‘ படங்களில் நடித்துவரும் துஷாரா விஜயன் கருப்பு நிற காஸ்டியூமில்  இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com